குடிவரவு இகுடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. Read more
பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி (4) மற்றும் சனிக்கிழமைகளில் (5) அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அவசர தேவைகள் தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் சியோல் நகருக்குள் பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு அந்த நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம் ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனியான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர்களுக்கு எதிராக 06 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரிடமிருந்தும், மாணவரிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.