திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களினது அறிமுக நிகழ்வு 06.04.2025 அன்று மாலை 03.00 மணியளவில் உப்புவெளியில் அமைந்துள்ள சுவர்க்கா விடுதியில் நடைபெற்றது.Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராகச் சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டில் கைதாகித் தடுப்புக் காவலில் இருந்த ருஷ்தி என்ற இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை பிணையில் விடுவிக்கவும், மாதாந்தம் அவர் காவல் நிலையம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்
கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 April 2025
Posted in செய்திகள்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நாளை(08) வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று(07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார். பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றங்களை இழைத்துள்ளதாக தெரிவித்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more