
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு தமது முழு ஆதரவினை வழங்க ஆர்வமாக இருந்த ரஷ்யாவுடனான இறுக்கமான தொடர்பு தற்போது மந்தநிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுடனான பரஸ்பர உறவினை மேம்படுத்துவது குறித்து, அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, இலங்கை தேயிலையினை இறக்குமதி செய்யும் முன்னணி நாடாகத் திகழ்கின்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், இலங்கை ரஷ்யாவிற்கு 122 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையினை ஏற்றுமதி செய்துள்ளது.
அதேபோன்று 2023 ஆம் ஆண்டில் இலங்கை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்த ஏற்றுமதியின் மொத்த பெறுமதி 144.25 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதே காலப்பகுதியில் 393.55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கை பொருட்கள் ரஷ்யாவினால் இறக்குமதி செய்யப்பட்டன.