Header image alt text

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

vigneshwaranஇலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என்று இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. Read more

இளைஞர்கள், யுவதிகள் வாக்காளர்ளுக்கான நிகழ்ச்சித் திட்ட நிகழ்வின் ஊடக அறிக்கை

18+ 067jpg2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அன்பிற்கும் நட்பிற்குமான இளைஞர் வலையமைப்பும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி எனும் பயிற்சியினைப் பெறுவோருக்கான வரவேற்பு நிகழ்வு மற்றும் ஆரம்பத்தில் பயிற்சியினை பெற்றுக் கொண்ட குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அதே போன்று   YOUTHVOTESL நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகள் வவுனியாவில் மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்காக வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வருகை தந்து தங்களினுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இந் நிகழ்விற்கான விசேட அதிதியாக வருகைதந்திருந்த உதவித் தேர்தல் ஆணையாளர் நாளக்க ரத்நாயக அவர்கள், இந்த நிகழ்வானது எமது YOUTHVOTESL  வேலைத்திட்டத்தின் ஆரம்ப தினமாகும் எனக் கூறினார் . 18 வயதியை பூத்தி செய்கின்ற இளைஞர்களில் ஒரு பகுதியினர் நிகழ்கால தேர்தல் வாக்காளர்களை பதிவு செய்யும் செயற்பாட்டின் போது அவர்கள் உள்வாங்கப்படாமையை கருத்தில் கொண்டு வாக்குப் பதிவினை ஒழுங்கு முறைப்படுத்தும் நோக்குடன்  YOUTHVOTESL வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் முறைக்கான சர்வதேச தேசிய அமைப்பு (IFES) போன்ற அமைப்புகளுடன் ஒன்றினைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. Read more

புளொட் அமைப்பின் ஜேர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.! (படங்கள் இணைப்பு)

velo01தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜேர்மன் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வவுனியா வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 06.08.2016 சனிக்கிழமை அன்று  ‘கல்வியால் எழுவோம்’ செயற்றிட்டத்தின் மூலம்  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்  வவுனியா மாவட்ட  தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. Read more