நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு

landslidநுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில அதிர்வின் போது, நிலம் தாழ் இறங்கியதன் காரணமாக மக்கள் குடியிருப்பொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் நிகழ்ந்த நில அதிர்வில், 50 – 60 அடி வரையில் நிலம் இறங்கியுள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் நான்கு வீடுகளிலும், நிலத்திலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, இங்கு வசித்து வந்த குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு சேதங்கள் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த பிரதேசத்தில், புதிதாக தனியார் மற்றுமோர் மின் உற்பத்தி மையமொன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கான சுரங்க பாதைகள் அமைப்பதற்கான மலைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் போது, இந்த நில அதிர்வு நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பமண்டல புயலால் மெக்ஸிகோவில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, 38 பேர் பலி

mexicoசனிக்கிழமை அன்று நாட்டின் கிழக்கு பகுதியை தாக்கிய ‘ஏல்’ என்ற வெப்பமண்டல புயலால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளாலும், வெள்ளப்பெருக்காலும் 38 பேர் இறந்துள்ளதாக மெக்ஸிகோ ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

புயெப்லா மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்திலும், அதற்கு அடுத்திருக்கும் வெராகுருஸிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் வீடுகள் புதையுண்டதால் தான் அதிகமானோர் இறந்துள்ளனர். கரீபியன் பகுதியில் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் முதல் வகை சூறாவளியான ஏல் பெலிஸியில் கரை கடந்தது.

32 தமிழர்களை விடுதலை செய்ய ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்

andraசெம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 32 தமிழர்களும் சென்னையிலிருந்து திருப்பதிக்கு கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

ரயிலில் பயணிகளாகச் சென்றவர்கள், வனம் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெயலலிதா, அவர்கள் எந்த வனப்பகுதிக்கும் அருகில் செல்லாதபோது, அவர்களை எப்படி இது தொடர்பாக குற்றம்சாட்ட முடியுமெனத் தெரியவில்லையெனக் கூறியிருக்கிறார்.

ஆகவே ஆந்திர முதல்வர் தலையிட்டு, 32 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் இதற்கென தமிழகத்தின் சார்பில் 2 வழக்கறிஞர்களை நியமிப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மாசிடோனியாவில் பெய்த கனமழையால் பேரழிவு

macedoniaஆறு பேரை காணவில்லை. 20 பேர் காயமடைந்துள்ளனர
மாசிடோனிய தலைநகர் ஸ்காப்யேவிலும் அதன் சுற்றுபுறங்களிலும் பெய்த கடும் மழை மற்றும் பலத்தக் காற்றால் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருப்பதாக மாசிடோனிய காவல்துறை தெரிவித்துள்ளது