Header image alt text

northern_provincial_council1வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான குற்ற சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்க உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிய இருந்தார்.

அதற்கு சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன. அமைச்சர்களை விசாரணை செய்ய குழு நியமித்தால் அமைச்சர்களின் சிறப்புரிமை மீறப்படும். – சயந்தன்.

அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கருத்து தெரிவிக்கையில் , Read more

போர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

fig-17போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவர்களா? என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீபவன் இதனை அறிவித்தார்.

போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரை இந்த தகவலை நிராகரிக்க தவறியுள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் இது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அந்த சட்டம் இதுவரை அமூல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே இந்த மனுவை முன்கொண்டு விசாரணை செய்ய முடியாதென்று கூறிய அரச தரப்பின் வழக்கறிஞர் அதனை தள்ளுப்படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதாக அறிவித்தனர்.

முன்னாள் போராளிகள் குறித்த சர்ச்சை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதில்

current shockபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து, நேற்றையதினம் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல் நிலையை சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் குறித்த பிரேரணையினை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதி

dayamaster1விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் சுற்றவாளி என தெரிவித்ததையடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read more