Header image alt text

heyittiகடந்த செவ்வாய்க்கிழமை ஹேய்ட்டியின் தென்மேற்கு பகுதி முழுவதையும் கடுமையாக சேதப்படுத்திய மெத்யூ சூறாவளி காரணமாக சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில், தென்மேற்கு ஹெய்ட்டியில் அணுக முடியாத வகையில் இருக்கக்கூடிய பகுதிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைத்தூர கடலோர நகரங்களில், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சில பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், அனைத்து கட்டடங்களும் சரிந்து விழுந்திருப்பதாகவும் தொண்டு நிறுவன பணியாளாரான கேட் கோரிகன் தெரிவித்துள்ளார். Read more

retires-onlineஓய்வு பெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார். ‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும். தேசிய ஓய்வூதிய தினம் 2005ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையில் கொண்டாடப்படுகின்றது. Read more

dfsgfgfநல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என நல்லிணக்கத்திற்கான செயலணி குறிப்பிட்டுள்ளது.

இந்த இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக நல்லிணக்கத்திற்கான செயலணியின் அங்கத்தவர் காமினி வியன்கொட தெரிவித்துள்ளார். Read more

article_1475904531-fgh-1திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பயணித்த வாகனம் தம்புள்ளை, பெல்வெஹர பிரதேச்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் லொறி ஒன்றின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அவரின் மகள், மகன், வாகனத்தின் சாரதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

maithriஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பமாகிறது. தாய்லாந்தில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள உள்ளார்.

ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது. 34 நாடுகளின் பங்களிப்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெற உள்ளது. Read more

japan-shipஜப்பான் நாட்டு கடற்படையினருக்குச் சொந்தமான ‘கஷிமா’, ‘செடோசுகி’ மற்றும் ‘அஷகிரி’ ஆகிய கப்பல்கள் ஒத்துழைப்பு, பயிற்சி நடவடிக்கைக்காக நேற்று வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கடற்படையினரின் சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகளுடன் கடற்படை தளபதி, கப்பல்களை வரவேற்றார். எதிர்வரும் 12ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் இந்த கப்பல்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

accidentதிருகோணமலை – சேருவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளொன்று கட்டுபாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தங்க நகர் கிராமத்தில் வசிக்கும் வாழைச்சேனையை சேந்த நளினிகாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hirunika‘தன்னுடைய தந்தையை கொலைசெய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம்சுமத்தியுள்ளார்.

பாரத லக்ஷ்மனின் நினைவு தினமான இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஹிருணிக்கா இதனை தெரிவித்துள்ளார். இந்த குற்றச்செயல்களுக்கு மறைமுகமாக உதவி செய்த நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

ranilபுதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் மற்றும் கட்சிகள் இணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய தாம் செயற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அரசியலமைப்பிற்கு அமைவாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண முதலமைச்சர் மாத்திரமின்றி ஏனையவர்களும் பல கருத்துக்களை முன்வைப்பதாகவும் அவ்வாறு கருத்துக்களை வெளியிடாது இருப்பதே சிறந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். Read more