Header image alt text

மரண அறிவித்தல்-

Posted by plotenewseditor on 10 October 2016
Posted in செய்திகள் 

jeyam-photo

தோழர். வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) அவர்கள் (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

1980களின் ஆரம்பங்களில் இருந்தே கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினராக செயலாற்றிய அவர் பின் லண்டன் கிளையின் அமைப்பாளராக இருந்தார். அண்மையில் நடைபெற்ற கழக மாநாட்டில் அவர் கழகத்தின் செயற்குழு அங்கத்தவராக தெரிசெய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடிவிற்காக மிகவும் ஆர்வமாகவும், மிகக் கடுமையாகவும் உழைத்த அவர், யுத்தத்திற்கு பின்னரும்கூட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் மிகுந்த ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் செயற்பட்டு வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை (DPLF)

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 10 October 2016
Posted in செய்திகள் 

untitled-1-2

ritaஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு இன்று வருகை தந்துள்ளார்.

இவர்கள் எதிர்வரும் 20ம் திகதிவரை இங்கு தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பொருட்டு இவர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

patriciaபொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்றிசியா ஸ்கொட்லன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

புதன்கிழமை ஆரம்பமாக உள்ள உலக ஏற்றுமதி அபிவிருத்தி ஒன்றியத்தின் 16ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார். Read more

jeyampathyபிச்சைக்காரனின் புண்ணைப்போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இனியும் இழுத்தடிப்பு செய்ய முடியாதெனவும், இனப்பிரச்சினையை வைத்துக்கொண்டு இனியும் அரசியல் நடத்துவதற்கு இடமளிக்க முடியாதெனவும் அரசியலமைப்பு நிபுணரும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை இரண்டாக பிளவுபடுத்த அரசு ஒருபோதும் அனுமதிக்காதென குறிப்பிட்ட ஜயம்பதி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் நிலையானதொரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கே முயற்சிக்கின்றதென குறிப்பிட்டுள்ளார். Read more

sfdஇலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் றோடேம் நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவர் நேற்றுமாலை 5மணியளவில் யாழ் கோவில்வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

namalபொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் 200 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

கிறிஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தத்துடன் தொடர்புள்ளதாகக் கூறி தன்னை கைதுசெய்தமை குறித்து அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். Read more

karu jeyasuriyaசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் சீனா பயணமாகியுள்ளனர். Read more

mahinda-balasuriyaமுன்னாள் பொலிஸ் மா அதிபரும், தூதுவருமான மஹிந்த பாலசூரிய பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு நாளையதினம் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 5 பேருக்கு சட்ட விரோதமான முறையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு அரச நிதியிலிருந்து மூன்று கோடி ரூபா முறைகேடாக செலவு செய்துள்ளதாக மஹிந்த பாலசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

sssநுவரெலியா தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிச் சென்ற தனியார் பஸ், வாழைமலை பகுதியிலுள்ள மண்மேடொன்றில் மோதி விபத்துக்குள்ளானத்தில் அதில் பயணித்த மாணவர்கள் உட்பட 71 பேர் படுகாயமடைந்த நிலையில் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்தாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் பயணித்த 66 மாணவர்கள் உள்ளிட்ட 71 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.