Header image alt text

islands-boat-serviceயாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. Read more

sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பானது, நீதி மற்றும் சமவுரிமையை அடிப்படையாகக் கொண்டு பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருமத்தில், தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய செயலாளர் நாயகமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும், அன்டோனியோ குட்டரஸ{க்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. Read more

thissa-athanaikeமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பிலான போலி ஆவணங்களை வெளியிட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read more

NPC (4)வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. Read more

Ilancheliyan-judgeயாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று கூறியுள்ளார்.

வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, நேற்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து, பிணை மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். Read more

vote2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 76,400 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மேன்முறையீடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். Read more

jaffna-campusசம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்தினர் உரிய தீர்வு வழங்காததன் காரணமாகவே அடையாள பணிபகஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்விசார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். Read more

hakeem met 1சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வளிப்பதற்கான சிபார்சுகளை செய்யக்கூடிய வகையில் சுயாதீன தேசிய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்ற சிறீலங்காக முஸ்லிம் காங்கிரஸின் பரிந்துரையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளதோடு அது தொடர்பிலான செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் நல்குவதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா நேற்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரைச் சந்தித்தபோது Read more

ethirisinghaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தான் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் சடலத்தை இன்று தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கல்கிசை நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்காக அவரது சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

justice-of-peaceயாழ். கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமாதான நீதவான் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சமாதான நீதவான் சுப்பிரமணியம் நமசிவாயம் என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 9.00 மணியளவில் மதுபானப் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் தெரியவருவதாவது,

இத் தாக்குதல் சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 21-09-2016 அன்று முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டிருக்கின்றது. Read more