Header image alt text

indian-foriegn-secretaryஇந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இன்றுமாலை 4.20 மணியளவில் இவர் வந்தடைந்துள்ளார். 3 உயர்மட்டக்குழுவினருடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் தங்கியிருக்கும் 3 நாட்களில் இந்தியாவின் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். Read more

ssssஇலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை தொடர்பான 27 ஆவது கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் கடற்படையின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு இருநாட்டு கடற்படை பிரதிநிதிகளுக்கும் இடையில் காங்கேசன்துறை கடற்பரப்பில் இந்திய கடற்படைக்கு சொந்தமான முயனஅயவவ கப்பலில் இடம்பெறுகின்றது. இதன்போது இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் பாதுகாப்பு தகவல் பரிமாற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

paffrelஉள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவித தேவைப்பாடும் இல்லை என்று பெபரல் அமைப்பு கூறியுள்ளது. இதன்காரணமாக அரசின் சில அதிகாரிகள் கூட அசௌகரியத்திற்கு உள்ளாகியிருப்பதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.

இது சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை எல்லை நிர்ணய குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

police ...புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டி வீதியை மறித்து மீனவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி கடல் பிரதேசத்தில் ‘லைலா’ வலைகளைப் பாவித்து மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மற்றொரு தரப்பு மீனவர்கள், கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். Read more

navyஇந்திய – இலங்கை சிறப்புப் படைப்பிரிவுகள் பங்கேற்கும், மித்ர சக்தி என்ற கூட்டுப் பயிற்சி அம்பேபுஸ்சவில் உள்ள இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவு தலைமையகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை- இந்திய இராணுவங்களுக்கிடையில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சியின் நான்காவது கட்டம் இதுவாகும். Read more

jaffna-university-studentயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றுகாலை அவர்கள் ஐவரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அவர்கள் ஐவரையும் அநுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைப்பதுடன், மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read more