Header image alt text

img_9224வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி. மீரா குணசீலன் தலைமையில் இன்று (08.12.2016) திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.கந்தையா சிவநேசன் (பவான்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு.சி.ரவீந்திரன், குருமன்காடு பொலிஸ் அதிகாரி திரு.இலங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், Read more

20161121_150134வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களின் வருடாந்த அபிவிருத்தி மூலதன நன்கொடை நிதிமூலம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐயன்குளம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாபு முன்பள்ளிக்கான கட்டிடம்

மாகாணசபை உறுப்பினரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ரூபா 100,000/- ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இவ் முன்பள்ளியின் திறப்பு விழாவில் கல்வித் திணைக்களத்தின் பிராந்திய முன்பள்ளிகளுக்கான பணிப்பாளரும் கலந்து கொண்டிருந்தார். Read more

unஇலங்கை பாதுகாப்புத் தரப்பினரால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் இறுதி அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் பின்னர், இலங்கையில் பாரிய சித்திரவதைகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more

courtsபேஸ்புக் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேகநபரான குறித்த 26 வயது இளைஞர், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், பிறிதொரு இணையப் பக்கத்தில் இருந்த தகவலையே பதிவு செய்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எது எவ்வாறு இருப்பினும், இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாக, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர். இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 15ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

sampur-peopleசம்பூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான காணியில் தொடர்ந்து வசித்துவருகின்ற குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சம்பூர் மக்கள் மேன்முறையீடு செய்யவுள்ளனர்.

மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் காணியில் அமையவிருந்த அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி யைத் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லவென கடற்கரைச்சேனை கிராமத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. Read more

harbourகொழும்பு துறைமுகத்தில் இன்றுஅதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த தோடு மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துறைமுகத்தின் ஊழியர் ஓய்வறைப் பகுதியிலேயே இன்று அதிகாலை தீ பரவியிருந்ததாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 38 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீயணைப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ள துறைமுகப் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.