Header image alt text

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றுமாலை 5.00மணிமுதல் 8.30மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம், சர்வேஸ்வரன், டெலோவின் சார்பில் என்.சிறீகாந்தா, கே.கருணாகரம் (ஜனா), எம்.கே.சிவாஜிலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். Read more

sri-hettigeதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையிடம் கையளித்துள்ளார். ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கற்கை நெறியைத் தொடரவுள்ளதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். Read more

housing schemeபொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். Read more

v-k-sasikala

கச்சத்தீவை முன் யோசனையின்றி இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததன் காரணமாகவே இந்திய மீனவர்கள் இழப்புக்களுக்கு ஆளாகி வருவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீ.கே. சசிகலா அறிக்கையொன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார். Read more

vigneswaranவடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர். இம் மாதம் 15, 16, 17ஆம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்தது தெரிவிக்கையில், Read more