Header image alt text

img_0721பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் இன்றையதினம்(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நெளுக்குளம் இளையநிலா இளைஞர் கழக மைதானத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ் நிகழ்வில், 30 தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. Read more

img_0651தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில்,

நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் இளையநிலா இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான புனரமைப்பும், கட்டிட புனரமைப்பு என்பவற்றின் திறப்பு விழா இன்று(08.01.2017) ஞாயிற்றுக்கிழமை இளைஞர் சேவை அதிகாரி திரு அஜித் சந்திரசேன தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வினோ, வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். Read more

img_0571வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிரமதானப் பணியும், ஆலயத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் இன்றையதினம் (2017.01.08) ஆலயத் தலைவர் பாபு தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் திரு வ.பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு ஸ்ரீகரன் கேசவன், கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றதோடு பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலைபேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் என்ற தொனிபொருளின் கீழ் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து இரண்டாண்டு பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்றுமாலை இடம்பெறுகின்றது. இந்தியாவின் ஆந்திரா மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதன்போது அனைவருக்கும் சௌபாக்கியம் என்ற தொனிப்பொருளில் ஆந்திரா மாநில முதல்வர் உரையாற்றவுள்ளார். Read more

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உத்தயோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளையதினம் பிரித்தானியாவுக்கு பயணம் செய்கின்றார். இந்தப் பயணத்தின் போது அவர், வரும் 11ஆம் திகதி மாலை 6மணியளவில் லண்டனில் உள்ள சதாம் இல்லத்தில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ளார்.

ஒருவாரகால பயணமாக செல்லும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் தங்கியிருக்கும் போது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சனைச் சந்திக்கவுள்ளார். அத்துடன் சில தனிப்பட்ட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தெரசா மே அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், லண்டனுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளும் இலங்கையின் முதலாவது உயர்மட்டப் பிரமுகர் மங்கள சமரவீரவே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

jailஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று, இரண்டாண்டுகள் பூர்த்தியாவதையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 285 கைதிகள், இன்றுகாலை, விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். இதேவேளை, திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் தலைமையில் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக எமது புலம்பெயர் உறவான c2குகபாலன் அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்ல உணவு களஞ்சியத்திற்க்கு 32,000 ரூபா பெறுமதியான 104 பால்மா பைக்கற்றுகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளதன் ழூலம் பாரதி இல்ல 108 சிறார்களுக்கான உணவு களஞ்சியத்தில் 40 நாட்களுக்கான பால்மா பைக்கற்றுகளின் இருப்பை உறுதி செய்துள்ளார்.

சிறார்களின் உணவு இருப்பை கருத்தில் கொண்டு இக் கைங்கரியத்தை செய்ய முன் வந்துள்ள புலம்பெயர் உறவான குகபாலன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்).

sureshஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி நகைப்புக்குள்ளாகியுள்ளதாகவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். Read more

b2வட்டுக்கொட்டை இந்த வாலிபர் சங்கத்தால் விழிப்புலன் செவிப்புலனற்ற மாணவர்கள் தங்கி கல்வி கற்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்ல மாணவர்களின் இசைத்திறன் மேம்பாட்டிற்க்காக ஓகன் இசைக்கருவி அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.

மேற்படி இல்ல நிர்வாகம் தமது விழிப்புலனற்ற மாணவர்களின் இசை மேம்பாட்டிற்க்காக ஓகன் இசைக்கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ள போதிலும் தமது இல்ல மாணவர்களக்கு ஓகன் இசைக்கருவி இல்லாததால் மாணவர்கள் பேரும் சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள் எனவே விழிப்புலனற்ற மாவர்களின் இசை ஆர்வத்தை கருத்தில் கொண்டு தமது இல்லத்திற்க்கு ஓகன் இசைக்கருவியை பெற்று தருமாறு வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கத்திற்க்கு விடுத்த விண்ணப்பத்திற்க்கு அமைவாக Read more

sfdfdநீதிமன்ற உத்தரவையும் மீறி, ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட 23 பேரையும், விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இவர்கள், நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்போது, இவர்களில் 21 பேரை, நாளை 9ஆம் திகதி வரையும் ஏனைய இருவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். தெற்கு கைத்தொழில் வலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். Read more