Header image alt text

cheddikulamவவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுட்டிருந்தனர். குறித்த பாடசாலையில் 538 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர்.

பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப்பற்றாக்குறை என்பன காரணமாக மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே மாகாண, மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்வி உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். Read more

semmaniஇலங்கை போக்குவரத்துச் சபை பஸ்சும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் கிராமசேவையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுகாலை 9.30மணயளவில் செம்மணிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 57 வயதுடைய கந்தையா சிறீவிக்னேஸ்ராஜா என்ற கிராமசேவையாளரே படுகாயமடைந்துள்ளார்.

கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நாவற்குழி சந்தியில் இருந்து செம்மணி வீதிக்கு பயணிக்க எத்தனித்த வேளை அக்கரைப்பற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

sfdfdஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 32 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தின்போது, பௌத்த பிக்கு மற்றும் பிரதேச மக்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டி, வீரவில பிரதேசத்தில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியை மறித்து வீரவில சந்தியில் இருந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஹம்பாந்தோட்டை பகுதியில் கடந்த 07ம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more