Header image alt text

20170131_162049_resizedகடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழை காரணமாக ஆயித்தியமலை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கற்பானைக் கிராமத்தில் அமைந்துள்ள மூன்று சிறிய குளங்கள் உடைப்பெடுத்தன. இதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக அங்கு நேரில் சென்றிருந்தார்.

55 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்து வெளியேறியுள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் பா.உ வியாழேந்திரன் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட மாவட்ட பிரதேச அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். Read more

policeயாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் நேற்று முன்தினம் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். மாவட்டத்தில் குறிப்பாக நகரப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 18 வயது மற்றும் 21 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வியை தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

champikaஇராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைதுசெய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி, மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டைக் கோருவதானது, தமிழீழத்தை மறை முகமாகக் கோருவதற்கு சமனாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Read more

weதமது காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என, கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக, நேற்று முதல், தொடர்ச்சியான போராட்டத்தில், கேப்பாப்புலவு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், அம்மக்களை நேற்றுச் சந்தித்துள்ளனர். இதன்போது, காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுவது தொடர்பில் உரிய பதிலை வழங்க இரு வார கால அவகாசத்தை மக்களிடம் கோரியிருந்தனர். Read more

jothidarஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு உயிரிழப்பார் என, ஆரூடம் கூறிய பிரபல ஜோதிடரான விஜித ரோஹன விஜேமுனி, பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவனரால், கைது செய்யப்பட்டார். மேலும், “எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும்.

எனினும், அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன்” என, மேற்படி ஜோதிடர், கடந்த வருடம் ஆரூடம் கூறிய காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில், தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பிரிவினர், நேற்று, அவரைக் கைது செய்திருந்தனர். Read more

police-stationயாழில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து இறங்கியபோதே, அங்கிருந்த நபரொருவரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோன் அபிசேன் (வயது 14), விசுப்டியோன் (வயது14) ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டவர்களாவர். கடந்த திங்கட்கிழமை விளையாடச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்று, விளையாட்டின் நிமித்தம், புகையிரதம் மற்றும் பஸ்ஸில் பயணிக்க வேண்டுமென்ற ஆசையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரை பஸ்ஸில் சென்றோம் என மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். Read more

missingஅண்மையில் காணாமல் போனதாக கூறப்பட்ட டெலிக்கொம் நிறுவனத்தின் மனிதவள (மேன்பவர்) ஊழியர் இங்கிரிய பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இவர் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று தான் வேனில் கடத்திச் செல்லப்பட்டதாக கூறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மஹரகம பகுதியில் வைத்தே இவர் கடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக, இங்கிரிய பொலிஸார் சந்தேகநபரை பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.