Header image alt text

P1410864யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் 2017 இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 15.02.2017 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் நா.மகேந்திரராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். விருந்தினர் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,

தங்களுடைய குழந்தைகளுக்கு யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதி பெற்றுத் தரும்படி மார்கழி மற்றும் தை மாதங்களில் மிகப் பெருமளவிலான கிராமத்துப் பெற்றோர்கள் எங்களிடம் வந்து வினயமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதிபர் மகேந்திரராஜா அவர்கள் தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் நண்பர் என்கிற ரீதியில் நீங்கள் கூறினால் அவர் அனுமதி தருவார் என்றும் கூறுவார்கள். அப்போது அவர்களுக்கு நான் கூறுவது, உங்களுடைய அயற் பாடசாலையை சிறப்புறச் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் அயற் பாடசாலைகளில் உங்கள் பிள்ளைகளை அனுமதியுங்கள். Read more

P1410815யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 2017-நிகழ்வு நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு. மோகநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக லோ.விஸ்வநாதன் (நிர்வாக உத்தியோகத்தர் கல்வியமைச்சு, வடமாகாணம்), சுபாஸ் மஞ்சுளா கந்தவல (கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான சி.தினேசன் (வைத்தியர், யாழ் போனதா வைத்தியசாலை), திரு. க.தர்சன், திருமதி த.லீலாராணி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

dfஅரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் கூட முன்னேற்றம் காண முடியாதுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்க்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநி மு. மக்கோலின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங்லாய் மார்க் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு முதல்வர், நல்லிணக்கம் தொடர்பாக பலவித செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எந்தவகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சென்றடைகின்றன என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். Read more

fdகாணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். Read more

asfdஅவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் மனிதக் கடத்தல்காரர்களிடம் சிக்கி அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்த அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கென்பரா நகர பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் இணைந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. Read more

dfgfதமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக கடந்த 13 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்றுமுதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத்தில் மூவர் வீதம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. Read more

gfgfமன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மன்னார் மாவட்ட நீதவான், நீதிமன்ற நீதிபதி ஏ.சி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களைப் பகுப்பாய்விற்கு உட்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. Read more