Header image alt text

P1420225யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 17.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் யோகதயாளன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ளு.ஓ அன்ரன் (யோக பயிற்சி) அவர்களும், கௌரவ விருந்தினராக வர்த்தகர் பரமேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. Read more

P1420172வட்டுக்கோட்டை வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 17.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் தனபாலசிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்கான பரிசில்களை வழங்கிவைத்தார். இப் பாடசாலையின் கட்டிட புனருத்தாரண வேலைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 150,000.00 ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தார். Read more

dgfgdவிமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது நிலைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லையென விமானப்படை கூறியுள்ளது.

கேப்பாப்புலவில் உள்ள விமானப்படை நிலைகளை விலக்கிக் கொள்வது குறித்த எந்த அறிவுறுத்தலும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வரவில்லை என்றும், எனினும், இப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படு வதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

erereமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்திவரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது.

போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். Read more

fhghghகேப்பாப்பிலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில்,

நேற்றையதினம் இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்று எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hgfhggமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. அத்தோடு அருகில் இருந்த துவிச்சக்கர வண்டி உதிரிப்பாக கடை ஒன்றும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீப்பரவல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தீயை ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாது வர்த்தகர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த உணவகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட எதிர்மறை மின் உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  இந்த தீ விபத்தின் காரணமாக இரு வர்த்தக நிலையங்களிலும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவ்விடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sfdகளுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதில் 26 பேர் பேருவளை மருத்துவமனையிலும் மேலும் 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பேருவளையிலிருந்து கட்டுகுருந்த பகுதிக்கு மதவழிப்பாட்டிற்காக படகொன்றில் சென்றிகொண்டிருந்த போதே இவர்கள் விபத்தில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.