Header image alt text

sdffsdsஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர்.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், நேற்றுக்காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். Read more

genevaஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் பிரதிநிதிகள் இருவர், இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பலவற்றை இக்குழு முன்னிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. வன்னி இறுதிக் கட்டப் போராட்டத்தின்போது வடக்கு பெண்கள்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் வடக்கிலிருந்து இராணுவம் நீக்கப்படாதுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் ஐ.நா. குழு கேள்வி எழுப்பிளதாகவும் ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read more

ssகிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். Read more

maithriரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின்போது இலங்கைக்கு நன்மை ஏற்படக்கூடிய சில முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் டொக்டர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்கின்றது எனவும், ஏனைய சிறுபோக உற்பத்திகளும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் ஊடாக உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் முனைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக தூதுவர் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.