Header image alt text

P1420466இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி தெற்கு, பலாலி, வசாவிளான், தோலகட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

சொந்த நிலத்திலிருந்து வெளியேறி 30 வருடங்களாக தனியார் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்றையதினம் புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அந்த மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்குத் தனது பூரண ஆதரவினை வழங்கியதோடு, அவர்களது பிரச்சினையை அரசு மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். Read more

P1420488வேலைவாய்ப்பினை வழங்குமாறு அரசாங்கத்தைக் கோரி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் தொடர் போராட்டமொன்றை யாழ் கச்சேரிக்கு முன்பாக நடாத்தி வருகின்றனர். புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றையதினம் அவ்விடத்திற்கு சென்று பட்டதாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பான பிரதியொன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் அவர்களால் கையளிக்கப்பட்டது. இதன்போது இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையூடாக அரசாங்கத்தின் உரிய தரப்பினருக்கு எடுத்துக்கூறி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார். அவர்களின் மகஜர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Read more

sdgsஇராணுவத்தின் 571ஆவது படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் காணியில் ஒரு ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நில அளவீடு இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காணி விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது என்றும் அதனை நேரில் சென்று தான் பார்வையிட்டு இன்றைய தினம் நில அளவீடு செய்யப்படும் என நேற்று மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் காணி கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திடம் மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் எனவும் பின்னர் கல்வித் திணைக்களம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ssவவுனியாவில் காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டத்திற்கு வவுனியா வளாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று 6ஆவது நாளாகத் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கே குறித்த ஆதரவினை பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கியுள்ளனர். இன்று பிற்பகல் 1மணியளவில் வவுனியா வளாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் நோக்கில் ஆசிரியர் சங்கம், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பேரணியாக வந்து காணாமற்போன உறவுகளுக்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

arrest (9)காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது கெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும், கிரான் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சம்பவத் தினத்தன்று அவர் கொழும்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். Read more

eeeஅமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவருடன், பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹாரிசின் மூத்த பட்டியல் அதிகாரி, சார்ஜன்ட் மேஜர் அன்ரனி ஸ்பாடரோ, அமெரி க்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் பணியக பணிப்பாளர் பிரிட்டானி பில்லிங்ஸ்லி ஆகியோரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். Read more

sஅனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது கொழும்பில் வசித்து வரும், ரஜரட்ட பல்கலைகழக மாணவ னான தவகுலரெத்தினம் ரகுராம் (வயது 24) எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.

சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த விபத்து சம்பவத்தில் குறித்த மாணவன் உயிரிழந்ததோடு மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sdsfsssகேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் ஒரு மாதகால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக இன்றையதினம் அவர்களின் சொந்தக் காணிகள், அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர். எனினும் பிலக்குடியிருப்பிலுள்ள 54 குடும்பங்களின் காணியில் 42ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. Read more

britishஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியா கோரியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய, பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 2015 அக்ரோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, இலங்கைக்கு நாம் காலஅவகாசம் வழங்க வேண்டும். Read more