Header image alt text

missing kilinochchiகிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

20-02-2017 அன்றுகாலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் பதினோராவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

sfsdமாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்கவில்லை. நோயாளர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. Read more

chief justiceஇலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப் இன்று காலை பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஓய்வு பெற்றதையடுத்தே 45 வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

அவர் பதவியேற்கும் நிகழ்வு இன்றுகாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 2007-2011 வரையான காலப்பகுதியில் அரச சொலிஸிஸ்டர் ஜெனரலாகக் கடமையாற்றிய இவர், பல தடவைகள் பதில் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sdfgsஇலங்கையில் மாலபே தனியார் வைத்திய கல்லூரி நிறுவுதல் மற்றும் எட்கா எனும் இலங்கை இந்திய பொருளாதார ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வைத்தியர்கள் விடுதியிலிருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஹொறவப்பொத்தானை வீதியூடாக மணிக்கூட்டுக் கோபுரம் வீதி வழியாக கார்கில்ஸ் புட்சிட்டியை வந்தடைந்து அங்கு வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், “வைத்திய சேவையின் இதயத்தை காப்போம்”, “போலிப் பட்டம் விற்கும் சைட்டத்தினை மூடு”’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தியர்கள் முன்வைத்தனர்.

maithri (15)இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ஆம் திகதி இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதோடு இவை கடற்றொழில் மற்றும் சமுத்திரவியல் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் ஒத்துழைப்பு சார்ந்த உடன்படிக்கைகளாக இருக்குமென தெரிவித்தார். Read more

P1420497வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இணைந்துள்ளனர்.

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற தமது போராட்டம் தொடரவுள்ளதாகவும், இதுவரை பல்வேறு வாக்குறுதிகளை கேட்டு ஏமாந்து போயுள்ளதால் இதுவே தமது இறுதி போராட்டம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read more

sdfdகளுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின்மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பில், சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அந்த சந்தேநபர்கள் போலியான கடவுச்சீட்டுகள் மூலமாக, நாட்டைவிட்டு தப்பியோட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதென கூறியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்ளுக்கு சந்தேகநபர்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more