Header image alt text

missingதிருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு இன்று மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மாலை அங்கிருந்து அகன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைரின் இல்லத்தின் முன்னே திரண்டனர். Read more

police ...யாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகளில் பிரதானமாக ஈடுபட்டு வரும் ஆவா குழுவினருடன் தொடர்புடையதாக சந்தேகநபர்கள் 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பொலிஸூடன் தொடர்புடைய சில குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். Read more

maithriமுகஸ்துதி பாடும் அரசியல் கலாசாரத்திற்கு எதிர்காலத்தில் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சரியான நோக்கம், கொள்கை மற்றும் வேலைத்திட்டமின்றிய அரசியல் கட்டமைப்பாக முன்னோக்கிச் செல்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் விஞ்ஞான கல்வியகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார். Read more

peruபெரு நாட்டில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர் உள்ளனர் என தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

800க்கும் மேலான நகரங்களில் அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது தலைநகர் லிமாவில் திங்கட்கிழமையிலிருந்து குடிநீர் கிடைக்கவில்லை. Read more