Header image alt text

northநினைவேந்தல் நிகழ்வுகள் என்ற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும்  வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும்  நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டி வரும். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் என அறிவிக்கப்பட்டு இம் மாதம் 12ம் திகதி தொடக்கம் வடக்கில் பல இடங்களிலும் நினைவு கூரப்பட்டு வருகின்றமையும் கடைசிநாள் மே 18 முள்ளிவாக்காலில் இறுதிநாள் அஞ்சலி நடைபெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

vavuniyaவவுனியா மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

thumb_SB_Disanayakaவட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின்  உச்சகட்டமாக அமைந்துள்ளது. மீண்டும் சர்வதேச அழுத்தங்களுக்குள் அரசாங்கத்தை தள்ளி நல்லிணக்கத்தை குழப்பி அரசாங்கத்தை  சீண்டிப்பார்க்கிறார் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக தெரிவித்தார்.

நல்லிணக்க நகர்வில் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேச தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

us_meet_north_cmஅமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷ;hப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அமெரிக்க குழுவினர் இங்குள்ள நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாக, வடக்கு முதல்வர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, Read more

thatkolai01தொட்டிலில் கதறியழுத ஆறு மாத குழந்தையை விட்டு விட்டு தூக்கில் தொங்கிய இளம் தாய் குடும்ப பெண்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இச் சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில்  வசித்துவரும்  ஆறு மாத கைக்குழந்தையின் தாய் சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (15) காலை 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். Read more

koreaவட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் – உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென் கொரியாவில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள சில நாட்களில் நடைபெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனை, தென் கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும். வட கொரியா தொடர்பான விடயங்களில் அமெரிக்கா தன்னுடைய கடும் அணுகுமுறையை தொடரும் என்று ஹேலி தெரிவித்திருக்கிறார். Read more

police-station-jaffnaயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக, கான்ஸ்டபிளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

பணிநிமித்தம் இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் சென்றுள்ளனர். Read more

Prisonபசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரமான ´லே´-யில் இருக்கும் புய்மோ சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரவில் கைதிகளில் ஒரு பிரிவினர் சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பி ஓடினர். Read more