Header image alt text

uduvil clup36உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நிகழ்வு (22.05.2017)  திங்கட்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் திரு. ரி.சிந்துஜன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. எம்.செல்வஸ்தான் (அதிபர், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி), திரு. எஸ். சண்முகவடிவேல் (மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

v.koddai hidu01இன்று எமது புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த மு.பரமேஸ்வரி அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக புன்னை நீராவியடியை சேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்ப்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக புதிய துவிசக்கரவண்டி ஒன்றை அன்பளிப்பு செய்து வைத்துள்ளார். Read more

londonபிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.

ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.