Header image alt text

kaluthrai02இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாகவும், 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது Read more

indian-shipஇலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமடைந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

kalai09யாழ். தெல்லிப்பழை சித்தியம்புளியடி கலைச்செல்வி சனசமூக நிலையம் நடாத்திய கலைச்செல்வி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2017 கலைச்செல்வி நூல் நிலையத்தின் அருகாமையில் இன்று (26.05.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் கலைச்செல்வி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சி.அனுசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. Read more

murgan02வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டல் நிகழ்வு

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டல் நிகழ்வு இன்று 26.05.2016 நண்பகல் 12.00 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ;மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா முன்நாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன் (புளொட்), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read more