Header image alt text

maithriஅரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான யோசனைகளையும் கருத்துக்களையும் மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மகா நாயக்க தேரர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். Read more

tna (4)நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற மகாநாயக்க தேரர்களின் கூற்றுக்கு தாம் இணங்கப் போவதில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த முடிவை மீள் பரிசீலணை செய்யுமாறு, தாம் மகாநாயக்கர்களிடம் கோருவதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் குறிப்பிட்டுள்ளார். Read more

Manoபுதிய அரசியலமைப்பில் வடக்கு – கிழக்கு இணைக்கப்படவில்லை எனவும், தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மாற்றப்படவில்லை எனவும், அது ஒருபோதும் சமஷ்டி யாப்பு இல்லை எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுமாயின் நாட்டை யாராலும் மீண்டும் காப்பாற்ற இயலாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Untitledயாழ். இணுவில் அண்ணா சனசமூக நிலையத்தின் 65 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் அண்ணா முன்பள்ளியின் விளையாட்டு விழா என்பன வெகு விமரிசையாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றன. ஆண்டு விழாவை முன்னிட்டுக்   காலை மருதனார்மடம் சந்தியிலிருந்து ஐம்பது மைல் தூரமுடைய சைக்கிளோட்டப்போட்டி ஆரம்பமானது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். Read more