Header image alt text

Canada00028வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தேசிய விடுதலை போராட்டத்தினால் வலுவிழந்த குடும்பங்கள், மாணவர்களிற்கான உதவி அமரர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவாக “உமா” உதவித் திட்டம் எனும் பெயரில்  ஆரம்பிக்கப்பட்டு இவ் உதவி  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றையதினம் வவுனியா கோயில்குளம் உமா இல்லத்தில் இடம்பெறும் “வீரமக்கள்” தினத்தில் வைத்து இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்றையதினம் மாலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து இந்த வாழ்வாதார உதவிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF-Canada) கனடா கிளையின் சிரேஸ்ட்ட உறுப்பினரும் பொருளாளருமான தோழர் சாள்ஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. Read more

3628ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்க மண்டபத்தில் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், மாவட்ட இணைப்பாளருமாகிய மகாதேவன் சிவநேசன் (பக்தன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் உயிர்நீத்த கழக உறுப்பினர்களின் உறவுகள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், ஊர்ப்பெரியோர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். Read more

ghjhjghj28வது வீரமக்கள் தின நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம்,

கழகக் கண்மணிகள் மற்றும் போராளிகளினதும் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. பிரான்ஸ் வீரமக்கள் தின நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களது குடும்பத்தார், உயர்நீத்தோர் உறவுகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

VMT - Batticaloa03வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று (15.07.2017) சனிக்கிழமை முற்பகல் 10மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 
ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், 

Read more

20170716_09105028ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. Read more

20137787_1258719190921867_766464101_oபுளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று (16.07.2017) காலை 8.00 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழகத்தில் திருநாவற்குளம் இளைஞர் கழகம் மற்றும் ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அனோஜன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

ஆரம்ப நிகழ்வாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் .
Read more