Header image alt text

err43ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்ட ஒலிம்பிக் சுடரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் மற்றும் படையதிகாரிகள் ஏற்றிவைத்தார்கள்.

கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய இந்த ஒலிம்பிக் சுடர் பயணம் செய்து விசுவமடு, புதுக்குடியிருப்பு, வட்டுவாகல் ஊடாக நேற்றுமாலை முல்லைத்தீவு அரச செயலகத்தை சென்றடைந்தது. இன்றுகாலை 9 மணியளவில் இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியினை அரசாங்க அதிபரும், மாகாண கொடியினை வடக்கு மாகாண அமைச்சர் கந்தையா சிவநேசனும் விளையாட்டு கொடியினை 59ஆவது படைப்பிரிவின் படைத்துறை அதிகாரியும் ஏற்றிவைத்தனர். Read more

susma susma subarajஇந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பு நகரில் இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு இடம்பெற்று வருகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இந்து சமுத்திர மாநாட்டிற்கிடையே, சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

frontவடக்கு மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் தனது கள விஜயத்தின்போது வவுனியா முருகனூர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள “அமுதசுரபி கால்நடை வளப்பாளர் சங்கத்தினரை 29.08.207 செவ்வாய்க்கிழமை சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அப்பகுதியில் தனியார் பால்சேகரிப்புகளின் போது ஏற்படுத்தப்படும் தடைகளினால் ஏற்படும் சேதங்களால் பெண் பயனாளிகள் படும் துன்பங்கள் சங்கத்தினர் எடுத்துக் கூறினார்கள். இதன்போது அமைச்சர் கூட்டுறவு அமைப்பினர் தற்காலிக தீர்வை கொடுத்திருந்தபோதும் நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்கக் கூறினார். இதன்போது அமைச்சரின் வவுனியா பிராந்திய இணைபாளர் யோகராஜாவும் சங்க செயலாளர் அவர்களும் இணைந்திருந்தனர். மாடு வளப்பாளர்கள் சந்தித்த இழப்புகளுக்கு அமைச்சர் இதன்போது தனது வருத்தத்தையும் தெரிவித்தார். Read more

joseph yuvarajpillaiசிங்கப்பூரின் தற்காலிக ஜனாதிபதியாக அரச தலைவரின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவரும், இந்திய வம்சாவளி தமிழருமான ஜோசப் யுவராஜ்பிள்ளை (வயது 83) இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என கடந்த 28-ம் திகதி அறிவிப்பு வெளியானது. இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்த நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்துள்ளார். Read more

elis wels“நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்,மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை” என, ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்கச் செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில், ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்று ரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று முன்தினம் பிற்பகல் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

navy jampiyaஇலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல்டிராவிஸ் சின்னாய்யாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜாம்பியா மற்றும் உக்ரையன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்ட மேற்குறித்த நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் புதிய கடற்படைத் தளபதியை சந்தித்து இந்த அழைப்பை விடுத்துள்ளனர். நேற்று கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாய்யாவைச் ஜாம்பிய இராணுவத்தின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பால்ஹியோவ சந்தித்தார். Read more

erகிளிநொச்சி இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி- நாச்சிக்குடா கடற்படை முகாமில் நேற்றையதினம் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும், இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இரணைத்தீவிற்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

keppapulaகேப்பாபுலவு மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 185 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

2008ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் மாதிரிக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். தமது சொந்த நிலத்துக்கு செல்வதற்கான போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தபோதும் இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.