Header image alt text

ssதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வும், “இலட்சிய இதயங்களோடு” நூல் வெளியீட்டு விழாவும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூட்டத்தில் நேற்று(03.09.2017) மாலை வண.கலாநிதி சு.ஜெபநேசன்; தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தளும், சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி கனக மனோகரனும் கலந்துகொள்ள “இலட்சிய இதயங்களோடு” நூலினை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டு வைத்தார். Read more

sampanthan visit durgadevi kovil (1)யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவும் கொடியிறக்க நிகழ்வும் நேற்று (03.09.2017) நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஆலய தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தபோது ஆலயத் தலைவர் ஆறு திருமுருகன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் அவரை வரவேற்று உபசரித்தார்கள். Read more

NPC20வது அரசியலமைப்பு திருத்தம் வட மாகாண சபையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்தில்

ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர் தமது முழு ஒத்துழைப்புடன் தோற்கடித்துள்ளனர்.

sdsவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்றுகாலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

கிராமிய பெண்கள் அமைப்பு, கிராம முகாமைத்துவ சம்மேளனம், சர்வமதக்குழுக்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த அமைதிப்பேரணியானது, Read more

sdsvvயாழ். வலிகாமம் வடக்கு இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஊறணியில் சில பகுதியளவிலான இடங்கள் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, அங்கு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு குடியமர்ந்துள்ள மக்கள், படையினரின் வசமிருக்கும் ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய, படையினர் இப்பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை விடுவித்தனர். இக்காணிகளை, யாழ். மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி தர்ஷன கெட்டியாராச்சி, கையளித்தார்.