Header image alt text

mohamed nasheedஇலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹ_செய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டபோது இலங்கையில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவித்தார். Read more

gggggggவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட குடும்பத் தலைவரைக் கொண்ட இரு குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும், ஒரு குடும்பத்திற்கு காற்றழுத்த மெத்தையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி விண்ணப்பத்தை அராலி தெற்கைச் சேர்ந்த ம.நகுலேஸ்வரி மற்றும் யாழ். குருநகரைச் சேர்ந்த அ.மேரிறோஸ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் வேண்டுகோளாக விடுத்ததுக்கமைய இன்று சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து பயனாளிகளிடம் அவை கையளிக்கபட்டுள்ளன. Read more

british parliamentஇலங்கையில் காணாமல் போனோர் விடயம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்தாடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் கடந்த வாரம் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரித்தானியாவின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். Read more

roadமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தில் நீண்டகாலமாக வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்படாமையைக் கண்டித்து, பொதுமக்கள், இன்றுகாலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமாங்கம், சகாயமாதா ஆலய வீதியின் ஒரு பகுதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால் குறித்த வீதியால் பயணம் செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். சகாயமாதா ஆலய வீதியின் சுமார் 200 மீற்றர் வரையான பகுதிகள் கடந்த காலத்தில் செப்பனிடப்பட்டபோதிலும் 100 மீற்றர் வரையான பகுதிகள் செப்பனிடப்படாத நிலையில் இருப்பதாக, பிரதேச மக்கள் தெரிவித்தனர். Read more

suicideயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும்.

2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். Read more