SFDFDகாணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகியுள்ள நிலையில் தாம் இனியும் ஏமாற தயாரில்லை என்று மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமற் போனோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற வழிபாடுகளை அடுத்து நகர் வீதிவழியாக ஊர்வலமாக வருகை தந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காணாமற் போனவர்களின் உறவுகள் சுமார் 10 பேருடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து இவ் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 9ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தமது கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.