koreaதடைகளை மீறி வடகொரியா இன்று மீண்டும் கிழக்கு திசை நோக்கி அணு ஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா இராணுவம் குற்றச்சாட்டி உள்ளது.

அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும்இ 3இ700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை சந்தித்துள்ள வடகொரியா சமீப காலத்தில் பலமுறை அணு குண்டுகளையும்இ கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.வடகொரியா 6–வது முறையாக கடந்த 3ம் திகதி அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவால் ஒரு தீர்மானம் கொண்டு வந்து தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இது வடகொரியாவுக்கு மேலும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தீய பொருளாதார தடைகளுக்கு மத்தியில்இ நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முடுக்கி விட வடகொரியா சபதம் செய்தது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தாலும் தன்னுடைய போக்கில் இருந்து வடகொரியா மாறவில்லை.

இந்நிலையில் இப்போது வடகொரியா இரண்டாவது முறையாக ஜப்பான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியா கிழக்கு நோக்கி ஜப்பான் நாட்டிற்கு மேற்பகுதியில் ஏவுகணையை வீசிஉள்ளது என தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்து உள்ளது. வடகொரியா ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனையில் அடாவடியாக ஈடுபட்டுவருவதற்கு எதிராக அமெரிக்கா தடைகளை கொண்டு உள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேஇ வடகொரியாவின் ஆபத்தான நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள மாட்டோம் என கூறிஉள்ளார். ‘இந்த வழியிலே வடகொரியா தொடர்ந்து பயணம் செய்தால்இ அதற்கு பிரகாசமான எதிர்காலம் என்பது கிடையாதுஇ’ என எச்சரிக்கை விடுத்து உள்ளார் ஷின்ஷோ அபே.

இந்த ஏவுகணை குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரிய கூட்டுப்படையினர் ஆய்வுசெய்து வருகின்றனர் என கூட்டுப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது