வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் சரஸ்வதி சிலை திறப்பு விழா 23/12/2021 அன்று காலை 9.00 மணிக்கு அதிபர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் கலந்துக்கொண்டு சிலையை திறந்து வைத்தார்கள்.

மேற்படி சிலையானது சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் நண்பன், சுவிஸ் வாழ் பழைய மாணவன் தனஞ்சயன் அவர்களின் நிதி பங்களிப்பில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி சசிகுமார், ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ஜெயச்சந்திரன், ஓய்வு நிலை அதிபர் அமிர்தலிங்கம், வவுனியா நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், இணக்க சபையின் உப தலைவர் அமிர்தலிங்கம், இலண்டன் கிளை தலைவர் ஞானேஸ்வரன், பொலிஸ் பொறுப்பதிகாரி, ஓய்வு நிலை கூட்டுறவு முகாமையாளர், ஆசிரிய ஆலோசகர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தார்கள்.