மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவச்சிலை வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகாமையில் இன்று மாலை 3.00 மணியளவில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கட்சியின் உயர்பீட மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள்,

கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்டங்களின் நிர்வாகத்தினர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப் பெரியோர்கள்,
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், மறைந்த தோழர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இச் சிலையை நிறுவுவதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பெருமளவு நிதியினை கனடாவின் கழகத் தோழர்.குணபாலன் அனுப்பி வைத்திருந்தார்.