ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணிஇ தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இன்று ஹட்டனில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டை தமது அரசியல் உயர்பீடகூட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னதாக எட்டியிருந்தது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.