எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்இ தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு தமது பிரத்தியேக ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பா. அரியநேத்திரன் 23.08.2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது இல்லத்தில் வைத்துச் சந்தித்தார்.

இதன்பின்னர் இருவரும் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அனைத்து தமிழர்களும் இந்தத் தேர்தலில் ஒருமித்துப் பயணிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.