வவுனியா நாலாம்கட்டை விசேட தேவைக்குட்பட்டோருக்கான புனர்வாழ்வு அமைப்பான வரோட் நிறுவனத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இன்று (09.02.2025) ஞாயிற்றுக்கிழமை விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு. திருமதி. பார்த்தீபன் தம்பதியினரின் செல்வப்புதல்வர்களான பார்த்தீபன் ஆதிசன், பார்த்தீபன் ஆகிசன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தோழர் சிவா, தோழர் அன்புமணி, யுரேனஸ் இளைஞர் அமைப்பின் இயக்குனர் க.சிம்சுபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.