தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இன்று யாழ்ப்பாணம் அரசரடி, கந்தர்மடம் பகுதியில் உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அமரர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் சகோதரர் இளங்கோ, தோழர் பிறேம் ஆகியோரின் அனுசரணையில் அரசடி கந்தர்மடம் ஜனசக்தி வாசிகசாலையில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சுமார் 75 பிள்ளைகளுக்கான புத்தகப்பைகளும், டிபன் பொக்ஸ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிள்ளைகளுக்கான சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில் கட்சியின் துணைத்தலைவர் இரா.தயாபரன், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஆசிரியருமான பா.கஜதீபன், திரு. தி.பரந்தாமன், ஜனசக்தி வாசகசாலையின் தலைவர் சியாஸ், அறநெறி பாடசாலையின் தலைவர் யோகராஜா,
கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சூரி, கட்சியின் முன்னாள் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் க.தர்சன், கட்சியின் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யுகராஜ், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பிறேம், கண்ணன், சுமன் ஆகியோரும், கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
