பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகக் கொழும்பு தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது மக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டமோ அல்லது வன்முறை செயல்களோ நடத்த அனுமதிக்க மாட்டாது எனவும்,
மக்கள் பிரதிநிதிகளின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் மற்றும் பணியில் உள்ள அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.