நீதிமன்றத்தில் சரணடைந்த வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமாரிற்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது.