கொட்டாஞ்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், உந்துருளியில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்பின்னர்,m சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் ‘மோதர நிபுண’ என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், கொட்டாஞ்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினர் புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அறியடுத்தியிருந்தனர்.

இந்தநிலையிலேயே, நீதவான் நீதிமன்ற சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.