ஒஸ்ரியாவை சேர்ந்த பெண் ஒருவரிடம் 50,000 ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கொள்ளுப்பிடிய காவல்துறையின் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு கையூட்டல் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 5 ஆம் திகதி அப்பெண்ணின் வழிகாட்டியால் கொள்ளுப்பிட்டிய காவல்துறையில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.