யாழ். ஏழாலை தெற்கைச் சேர்ந்த திரு. அப்பாத்துரை பாலச்சந்திரன் (ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்) அவர்கள் இன்று (07.03.225) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இவர் எமது கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஆசிரியர் பா. கஜதீபன் அவர்களின் அன்புத் தந்தையார் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
07.03.2025
குறிப்பு:
இறுதி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09.03.2025) காலை 10.30 மணியளவில் ஏழாலையில் இடம்பெறவுள்ளது.
தொடர்புகட்கு : +94 (77) 229 8850
( பா. கஜதீபன்)