முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை கைது செய்வதற்காகப் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றுடன் 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்னும் கைது செய்யப்படவில்லை.

கிரிபத்கொடை பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்குப் போலி உறுதியைத் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது.