உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையத்திற்குக் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.