Header image alt text

கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கும் சர்வதேச கடன் பத்திரதாரர்களுக்கும் இடையில் 2 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார். Read more

இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயணத் திகதியை மாற்றிக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாடு நாளை(15) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறவுள்ளது. அத்தியாவசிய நிதிகளின் அடுத்த தவணையை பெற்றுக்கொள்வது மற்றும் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்தல் தொடர்பில் அந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். Read more

14.04.2007இல் மரணித்த தோழர் லோகேஸ் அவர்களின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்று….

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்நிலையில் டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். Read more

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் FLY DUBAI விமானம் ஒன்றில் இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு துபாயில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளது. இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து சில இலங்கையர்களுடன் விமானம் டுபாய்க்கு திருப்பி விடப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். Read more

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் வொஷிங்டனில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நாளைய தினம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு ஆரம்பமாகவுள்ளது. அதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் முறுகல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சுமார் 200 ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதில் நூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தமது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். ஒரு சமூகமாய், தேசிய இனமாய் நாம் முகம் கொடுக்கும் அத்தனை சவால்களையும் வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை மலரும் புத்தாண்டில் ஒற்றுமையான, நீண்டு நிலைத்திருக்கக்கூடிய செயற்பாடுகளால் வலிமை பெறச் செய்திடுவோம்.

Read more

தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களை உள்ளடக்கி தெற்காசிய பொருளாதார மேம்பாடு தொடர்பிலான அறிக்கையொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கி வௌியிட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல் மற்றும் அதனுடன் இலங்கையின் நிதிக்கொள்கை, பொருளாதார மறுசீரமைப்பு என்பன உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான அபாயம் காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more