Header image alt text

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவை சேர்ந்த 33, 34 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு அருகில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் கடலோர காவல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உரிமை கோரப்படாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இவர் (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp, Telegram, WeChat போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தக் குற்றங்களால் பிரஜைகள் அதிகளவில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை வெளியிட்டு, ஒரு வணிகத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Read more

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக  வலி தற்றதாக்கும் வகையில்  இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையர்களுக்கான மறு நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

காணாமல் போன தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காலி, உனவட்டுன கடற்கரை பகுதியில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பிலான தகவல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read more

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயல்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை   அடுத்து  யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே  குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

Read more

இந்தியாவில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தையடுத்தே, இலங்கையால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் சில கடல் பகுதிகளில் மீன்பிடி உரிமைகளை இந்தியா விட்டுக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டிகள் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபால இன்று தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Read more