Header image alt text

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று (06) இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுக்குமாறு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இருப்பினும் இதன்போது எதிர்கட்சியினர் குறித்த பிரேரணை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. Read more

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு விரிவான, புதிய ஒத்துழைப்புகளை வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவு ஜனாதிபதி ஆகிய இருவரும் இணங்கியுள்ளனர்.

இலங்கையின் 71ஆவது தேசிய தின விழாவின் விசேட அதிதியாக இலங்கை வந்துள்ள, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பூர்வமாக வரவேற்றப்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டம் தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதி தமது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். Read more

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் பீ.எல்.எல்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த சார்ள்ஸை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ஓய்வுப்பெற்ற கடற்படை அதிகாரியொருவரை நியமிக்க கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவையின் இந்த யோசனைக்கு கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை மாற்றவதற்கு எடுத்த முடிவை நீக்குவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் வைத்திய சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள தாதியர்கள் தொடர்பில் அவதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தே அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எந்த விதமான முன்னறிவிப்பின்றி தாதியர்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பிரகடணம் செய்யப்பட்ட வைத்திய சேவையினை திடீரென பகிஸ்கரிப்பு செய்யப்பட்டமை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளார்.ஈ பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர் விக்டர் மட்ரிகல் பொர்லோஸ், இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, ஆணையகத்தின் விசேட விசாரணையாளர் அலைஸ் ஒஸென்பெயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

இதற்காக அவுஸ்திரேலியாவின் வான்படை தளபதி ரிட்சர் ஓவென் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியாவின் தமிழக மற்றும் புதுச்சேரி கடற்படை பிரதானி அலோக் பட்நகரை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஏதிலி முகாம்களில் வசிக்கின்றவர்களும், இலங்கையில் இருந்து புதிதாக செல்லும் சிலரும் அங்கிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. Read more

நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இக்கருத்து அதிர்ச்சியளிக்கின்றது. Read more

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடைக்காடு அக்கரை பகுதியைச் சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும், நேற்று மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். Read more

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகள் 80பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.

கிராஞ்சி அ.த.க பாடசாலை மைதானத்தில் நேற்றுமுன்தினம் (01.02.2019) நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளரும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்) கொடையாளி த.நாகராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா(யோகன்)பிரதேச சபை உறுப்பினர்), கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், தொண்டர் அமைப்பின் பிரதிநிதி யசோதரன், வேரவில், கிராஞ்சி பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்களின் இந்த நிதியுதவியினை நேற்றுமுன்தினம் (01.02.2019) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளரும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்) அவர்கள் வழங்கிவைத்தார். கிராஞ்சி அ.த.க பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொடையாளி த.நாகராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா(யோகன்)பிரதேச சபை உறுப்பினர்), கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், தொண்டர் அமைப்பின் பிரதிநிதி யசோதரன், வேரவில், கிராஞ்சி பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more