Header image alt text

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேன் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. வெளிநாட்டவர்கள் மூலமாக இலங்கையில் பரவும் வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலைமைகளை கண்காணிப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  MIZUKOSHI Hideaki துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வாவிடம் இவற்றை கையளித்துள்ளார். Read more

இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்க புதுடெல்லி தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்திய இலங்கை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் அண்டைய நாடு என்ற அடிப்படையில் இந்த ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 10 April 2024
Posted in செய்திகள் 

தோழர் கரூர் கண்ணதாசன் அவர்களின் மூத்த சகோதரர் திரு மா.பெருமாள் (ஓய்வுபெற்ற தபால் நிலைய அதிகாரி) அவர்கள் இன்றுகாலை மரணமெய்தியுள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது எனஇ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. Read more

அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அடையாளம் காண உள்நாட்டு சேவை வழங்குனர்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளம் தொடர்ந்தும் செயலிழந்துள்ளது. இது தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரை அறிவிப்பதற்கான அதிகாரத்தை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 (1) ஆவது சரத்தின் பிரகாரம், குறித்த 779 சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, புனித ரமழான் நோன்புப் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நிலையிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது. அதன்படி அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்காக, தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி அஞ்சல் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஞ்சல்மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையுடன் வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more