Header image alt text

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று(13) கைப்பற்றியது. ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைத்தது. யாழ் மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று(13) காலை நடைபெற்றது. வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் மேயர் தெரிவு இடம்பெற்றது. Read more

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இன்று(12) பிற்பகல் இடம்பெற்ற விமான விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனும் அனுமானத்திற்கு வந்துள்ளதாக  குஜராத் மாநில தலைமை பொலிஸார் அறிவித்துள்ளனர். விமானத்தில் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர்களில் 169 இந்திய பிரஜைகளும் 53 பிரித்தானியர்களும், 07 போர்த்துக்கல் பிரஜைகளும் கனேடியர் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல் வௌியாகியுள்ளது. Read more

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஜனாதிபதி பொது மன்னிப்பை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழுக்களால் சிறைச்சாலைகளிலுள்ள ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் ஜேர்மனி ஜனாதிபதிகள் இருவரும் நேற்று சந்தித்திருந்தனர். இந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கிடையேயான நீண்ட கால உறவு, பொருளாதார வளர்ச்சி, ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜேர்மனி ஜனாதிபதி Frank-Walter Steinmeier தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read more

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசுக் கட்சியும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் முதலாம் பகுதியாராகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரண்டாம் பகுதியாராகவும் சேர்ந்து ஆட்சியமைப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். Read more

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் மூவரடங்கிய குழு இன்று(11) சாட்சி விசாரணையை ஆரம்பித்தது. 2023ஆம் ஆண்டு வெலிகமவிலுள்ள ஹோட்டலொன்றின் மீது துப்பாக்கிப் பிர​யோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் போது உயர்திகாரிகள் தவறான பணிப்புரைகளை விடுத்ததாக மூவரடங்கிய குழு முன்னிலையில் இன்று(11) சாட்சியமளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி அன்சலாம் டி சில்வா தெரிவித்தார். Read more

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் பிரதான சூத்திரதாரியான இராணுவ புலனாய்வு பிரிவின் ஓய்வு பெற்ற பிரகேடியர் ஷம்மி குமாரரத்ன சாட்சியாளர் ஒருவருக்கு அழுத்தம் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று(11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். Read more

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.  குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. Read more

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை(11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(10) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு(09) கைது செய்யப்பட்டிருந்தார். Read more

10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….