Header image alt text

10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று.. 1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.
தோழர் சங்கர் (தம்பிராசா ராஜதுரை) அவர்களின் 28ம் ஆண்டு நினைவுகள்
மலர்வு : 1961.06.05
உதிர்வு : 1997.06.10
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை சிலருக்கு வயித்தெரிச்சலைக் கிளப்பிவிட்டுள்ளது, அவர்களைப் புலம்ப வைத்துள்ளது என்பது உண்மையே. இன்று காணக் கிடைத்த இணையத்தள பத்திரிகையின் பதிவு ஒன்றில் இருந்து அதனை தெரிந்து கொள்ள முடிந்தது.

Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று(09) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். சுங்கத்தில் சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று(09) காலை 10 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். Read more

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமளிப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனியவை பணிநீக்கம் செய்வதற்கு நேற்று(09) கூடிய அமைச்சரவை தீர்மானித்திருந்தது. ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு இலங்கை சுங்கத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.  அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன், பொதுமக்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு இணையத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more

சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்கள் தொடர்பில் வெளியான கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரித்ததுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகொட இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்களில் ஆயுதங்கள்,போதைப்பொருள் அல்லது தங்கம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரிக்கின்றது. Read more

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் இன்று (08.06.2025) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் இன்று (08.06.2025) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் நிதி மோசடி குற்றச்செயலுடன் தொடர்புடைய அதுல என்பவர் விடுதலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது. Read more

யாழ்.காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் நேற்று பொதிகள் போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தொடருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் நூலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், Read more